ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் மற்றும் சூர்யாவின் கங்குவா திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படத்தை அக்டோபர் மாதம் 10 ஆம் வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைகா திட்டமிட்டு இருக்கிறது. இந்த படத்திற்கான வியாபார பணிகளை தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதில் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இவர் ஏற்கனவே பாண்டியன், தர்பார் ஆகிய படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் வேட்டையன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வேட்டையன் வெளியாகும் அதே அக்டோபர் 10 ஆம் தேதியன்று சூர்யாவின் கங்குவா படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா, இயக்குநர் சிவா இயக்கத்தில் பிரமாண்ட படைப்பான ‘கங்குவா’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். மிக பிரமாண்டமாக பொருட்செலவில் உருவாகியுள்ளது கங்குவா திரைப்படம். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி மற்றும் பாபி டியோல் லீட் ரோல்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பதை எகிறவைத்தது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா பத்து விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கங்குவா மற்றும் வேட்டையன் படங்கள் நேரடியாக மோதவிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.