ஸ்ருதி சண்முகப்ரியா நாதஸ்வரம் தொடரின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி ஆனார். பின்னர், தான் நடித்த வாணி ராணி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து தனது ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்தினார். 2022 இல், அவர் தனது நீண்ட நாள் காதலரான அரவிந்தை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அரவிந்த் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாரடைப்பால் இறந்தார். திருமணமான ஒரு வருடத்தில் கணவர் இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது கணவர் மறைவுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலில் ஹீரோயின் தோழியாக நடித்து வருகிறார் சண்முகப்ரியா.
இந்நிலையில் ஸ்ருதி தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.தனது உயிர் அரவிந்த் என்றும், உயிர் உள்ளவரை அரவிந்தின் ஸ்ருதியாகவே இருப்பேன் என்றும் கூறியுள்ளார்