‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதை வேல்ஸ் தயாரிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் இதிலும் நடிப்பார்கள். தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி. ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதலில் ‘மெய்யழகன்’ படத்தில் பி.சி. ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பின்னர், உடல்நலக்குறைவு காரணமாக விலகினார். தற்போது ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போவதாக சமீபத்தில் நடந்த விருது விழாவில் பி.சி. ஸ்ரீராம் உறுதிபடுத்தியுள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பேக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல் பாகம் முடிந்த பிறகு இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வருகிறார் பிரேம்குமார்.