வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மோகன், மீனாட்சி செளத்ரி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘தி கோட்’.
ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் ‘தி கோட்’ வெளியாகியுள்ளது.
ஆனால், திட்டமிட்டபடி படம் இந்தியில் வெளியாகவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. ஹிந்தியில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அங்கு ஒரு படத்தை வெளியிட வேண்டுமானால், 8 வாரங்களுக்கு பிறகுதான் OTT-யில் வெளியிடுவோம் என்ற நிபந்தனையை கடைபிடிக்க வேண்டும். இதைப் பின்பற்றாத எந்தப் படத்தையும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியிட முடியாது.
OTT விற்பனை முடிந்தாலும் 8 வாரங்கள் காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மல்டிபிளக்ஸ் கூட்டமைப்புடன் அர்ச்சனா கல்பாத்தி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
ஆனால் 8 வாரங்கள் கழித்து OTD ரிலீஸ் என்றால் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர். இதனால் இந்தியில் ‘கோட்’ வெளியாகவில்லை. தென்னிந்தியாவில், பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும், ஹிந்தி பதிப்பைத் தவிர மற்ற பதிப்புகளிலும் ‘தி கோட்’ வெளியாகியுள்ளது.
இந்தியில் வெளியாகாததால் ‘கோட்’ படத்தின் வசூல் பாதிக்கப்படும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.