பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் கமல்ஹாசன் விலகிய பிறகு, அவரது இடத்தைப்பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 7 சீசன்களும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால், அவர் நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இருந்தார். ஆனால், திடீர் மாற்றமாக, கமல்ஹாசன் சினிமா பிஸியில் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து தொடர முடியாது என்று அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளராக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் முன்னணி இடத்தில் உள்ளனர். விஜய் சேதுபதி முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்துள்ள நிலையில், நயன்தாரா தற்போது எந்த நிகழ்ச்சியையும் தொகுக்கவில்லை.
ஆனால் அவர் சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இவர்களில் ஒருவரே பிக்பாஸ் 8-வது சீசனின் தொகுப்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்பதாக கூறப்படுகிறது.