தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி – 6 (நறுக்கியது)
பாசுமதி அரிசி – 1/2 கிலோ
நெய் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
அன்னாசி – 2
பிரியாணி இலை – 1
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
நறுக்கிய புதினா – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து ஒரு முறை மட்டும் கழுவி தனியாக வைக்கவும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கசக்கிய பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மேலும் இஞ்சி பூண்டு விழுது, முழு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் அடுத்து தக்காளி சேர்த்து வதக்கி, சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும். தக்காளி வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு சாதம் சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால் தக்காளி பிரியாணி ரெடி!