தேவையான பொருட்கள் :
டார்க் சாக்லேட் – 200 கிராம்
உப்பில்லாத வெண்ணெய் – 1/4 கப்
மைதா – 3/4 கப்
கோகோ தூள் – 2/5 கப்
பேக்கிங் பவுடர் – 2 ஸ்பூன்
சர்க்கரை தூள் – 1 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் உங்கள் ஓவனை 350°Farheneit (176.7° செல்சியஸ்)க்கு முன்கூட்டியே சூடாக்கவும். இதற்கிடையில் உங்கள் பேக்கிங் ட்ரேயில் காகிதம் வைத்து தயார் நிலையில் வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து நன்கு சூடாக்கவும். பின்னர் தண்ணீர் மீது மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதனை அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
இப்போது இதனுடன் மைதா, கோகோ தூள், பேக்கிங் பவுடர், சர்க்கரை தூள் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தயாரான பிரவுனி கலவையை காகிதத்தால் மூடப்பட்ட பேக்கிங் தட்டில் ஊற்றவும். சுமார் 25 நிமிடங்கள் ஓவனில் வைத்து எடுத்தால் சுவையான எக்லஸ் பிரவுனி தயார்.