தேவையானவை:
நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2 கப்
பச்சை மிளகாய் விழுது – 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு – 2 கப்
பூண்டு விழுது, உளுந்து – தலா 2 டீஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
நசுக்கிய பூண்டு – 5 பல்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: மரவள்ளிக்கிழங்கை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கைகளால் நசுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கிழங்கு சேர்த்து, சிறு தீயில் சிறிது நேரம் கிளறி, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.