தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 1 கப்
ராஜ்மா – 200 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
பட்டை – 1 சின்ன துண்டு
கிராம்பு – 4
அன்னாசி பூ – 2
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 2
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 3 ஸ்பூன்
செய்முறை:
ராஜ்மாவை நன்கு கழுவி, சுமார் 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போடு 5 விசில் வந்த பின்னர் இறக்க வேண்டும். பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போன பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் வேகவைத்த ராஜ்மாவை சேர்த்து கிளறிய பின்னர் கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இந்த கலவையில் 1 கப் ராஜ்மா வேக வைத்த தண்ணீர் மற்றும் 3/4 கப் சாதாரண நீர் சேர்த்து ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து ஒரு முறை கலக்கி விட வேண்டும். இப்போது குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால் அசத்தலான சுவையில் ராஜ்மா புலாவ் பரிமாற தயார்.