முல்தான்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடரும் தோல்விக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இங்கிலாந்து விளையாடிய போது பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சஜித் கான் மற்றும் நோமன் அலி இரு இன்னிங்சிலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
தொடரின் கடைசி போட்டி ராவல்பிண்டியில் நடக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டி கடந்த 15-ம் தேதி முல்தானில் தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 366 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 291 ரன்கள் எடுத்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் 221 ரன்கள் எடுத்தது. 297 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி துரத்தியது. பென் டக்கெட் 0, சாக் கிராவ்லி 3, ஆலி போப் 22, ஜோ ரூட் 18, ஹாரி புரூக் 16, ஜேமி ஸ்மித் 6, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 37, கார்ஸ் 27, ஜேக் லீச் 1, ஷோயப் பஷீர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய போது சஜித் மற்றும் நோமன் அவர்கள் எதிர்கொண்ட 33.3 ஓவர்களை வீசினர். நோமன் அலி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சஜித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.