சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா யு-19 இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய டெஸ்ட் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி முதல் இன்னிங்சில் 492 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா யு-19 தொடர்ந்து விளையாடி 80.2 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 215 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா யு-19 அணி 31.3 ஓவரில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டெஸ்ட் தொடரை இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.