மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிச. கடந்த 4-ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
சிலை நிறுவப்பட்ட 8 மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 26 அன்று இடிந்து விழுந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிடக் கலைஞர் சேத்தன் பாட்டீலை போலீஸார் கைது செய்தனர்.
மேடையின் வடிவத்தை மட்டும் மாநில பொதுப்பணித்துறை மூலம் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்ததாகவும், அந்த சிலைக்கும் தனக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றும் சேத்தன் பாட்டீல் விசாரணையில் கூறியது தெரியவந்துள்ளது.
மேலும், சிலை வடிவமைப்பில் தானேயைச் சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் நேற்று பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில்: சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் புதிய பிரமாண்ட சிலை விரைவில் அதே இடத்தில் அமைக்கப்படும் என உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.