புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் போதைப் பொருள் கடத்தியதாக ஜெர்மன்-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை சிபிஐ கைது செய்துள்ளது. கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தாரின் தோஹாவில் இருந்து இண்டிகோ விமானம் 6 E1308 மூலம் கோகோயின் கடத்தப்படுவதாக சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
இதில் சந்தேகத்தின் பேரில் ஜெர்மனியில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 6 கி.கி. அவரிடம் கோகோயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை சிபிஐ மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 30 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.