பாரீஸ்: நடப்பு ஆண்டுக்கான பலோன் டி’ஆர் விருதை ஸ்பெயினின் மிட் பீல்டர் ரோட்ரி வென்றுள்ளார். அவர் தனது தேசிய அணி மற்றும் கிளப் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். 2023-24 சீசனில் மான்செஸ்டர் சிட்டி பிரீமியர் லீக் பட்டத்தை வெல்லவும், யூரோ கோப்பையை ஸ்பெயின் வெல்லவும் அவரது செயல்பாடுகள் உதவியது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பலோன் டி’ஆர் விருதைப் பெற்றார். 28 வயதான அவர் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் மான்செஸ்டர் சிட்டி வீரர் ஆவார். கடந்த 16 ஆண்டுகளில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவைத் தவிர இந்த விருதை வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையை ரோட்ரி பெற்றார்.
கடந்த ஆண்டு 2018-ல் லூகா மோட்ரிச் இந்த விருதை வென்றார். அதன் பின்னர் ரோட்ரி விருது பெற்ற மிட்-பீல்டராக அறியப்பட்டார். பெண்கள் பிரிவில் ஸ்பெயினின் அதானா பொன்மதி ‘பாலன் டி’ஆர் 2024’ விருதை வென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயினின் யமால் வென்றார்.
பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் கால்பந்து’ 1956 முதல் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு இந்த விருதை வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களில் இருந்து வாக்களித்து சிறந்த வீரர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மெஸ்ஸி அதிகபட்சமாக 8 முறை இந்த விருதை வென்றுள்ளார். ரொனால்டோ 18 முறை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த விருதை 5 முறை வென்றுள்ளார்.