மழை மற்றும் வெயில் காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். இதை சமாளிக்க கடைகளில் இருந்து செயற்கை கொசு விரட்டிகளை வாங்குவோம். ஆனால், இதனால் பணம் அதிகமாக செலவாவதுடன் சுவாச பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
இதைத் தடுக்க இயற்கையான முறையில் வீட்டிலேயே கொசு விரட்டி தயாரிக்க முடியும். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் காபி பொடி ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசைபோல கலக்கவும். பிறகு, இந்த கலவையை பிரியாணி இலையின் இரண்டு புறங்களிலும் தேய்த்து காயவைக்க வேண்டும்.
காய்ந்த இலைகளை மாலை நேரத்தில் ஒளித்து, அதில் இருந்து வெளிப்படும் புகையை வீடு முழுவதும் பரப்பினால் கொசுக்களை தடுக்க முடியும்.
இந்த இயற்கை முறையைப் பயன்படுத்துவதால் செயற்கை கொசு விரட்டிகளை வாங்கும் செலவைக் குறைக்கலாம். மேலும், இதில் இரசாயனங்கள் சேர்க்கப்படாததால் சுவாச பிரச்சனைகளும் ஏற்படாது.