சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு எழுதிய கடிதம்:-
ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பி.பி.ஜி.சங்கர் கொலை தொடர்பான வழக்குகள், சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்குகள். இவரது மகன் அஸ்வத்தாமன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். இவரை இளைஞர் காங்கிரசுக்கு நியமித்தவர் செல்வப்பெருந்தகை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் என்பதால் அவரை கைது செய்ய அரசும், காவல்துறையும் தயங்குவதாக மக்கள் கூறுகின்றனர். எனவே அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.