சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் திமுகவை இணைத்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ரூ.1 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில்; போதைப்பொருள் பிடிப்பு, கைது தொடர்பான சமீபகால நிகழ்வுகளில் திமுகவை பற்றி பேசியதாக கூறினார்.
இதனால் திமுகவின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் X இணையதளத்தில் உள்ள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பற்றி பேச தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பிறகு; இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.