அவனியாபுரம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரச்னையில், இந்தியா ஒரே நாடுதானா என்று கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. தமிழகத்தில் மட்டும் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் வடமாநிலங்களில் எந்த மாநிலத்திலும் ஒரே தேதியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டதா என்று கேட்டால், இல்லை என்பதே பதில்.
ஏனென்றால் உங்களால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. நாமும் விசிகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இத்தனை நாட்களாகியும் எங்களுக்கு அங்கீகார கடிதம் கிடைக்கவில்லை. என்று கேட்டால், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் இருப்பதால் நேரமில்லை என்கிறார்கள். இரு மாநில தேர்தலுக்கு இவ்வளவு வேலை என்கிறீர்கள்.
நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் வெளியேறி ஆட்சியை கலைத்தால் மீண்டும் சட்டசபையையும், நாடாளுமன்றத்தையும் கலைத்துவிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்துவீர்களா? வேலையில்லாத தையல்காரர் யானைக்கு டவுசர் தைக்கும் கதை போல இதுவும். இதனால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. இது நிச்சயமாக ஒரு மோசடி. இவ்வாறு அவர் கூறினார்.