சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த ஜூலை 5-ம் தேதி செம்பியம் காவல் நிலையப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மேற்கண்ட 10 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு, பணம் பறித்தல், போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.