சென்னையில் இன்று 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும் நாளையும் காலை மற்றும் இரவு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று 55 மின்சார ரயில்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளும் சிரமம் அடைவதாகவும், இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் பயணிப்பதாகவும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் வாகனங்களால், சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்வதாக கூறப்படுகிறது.