நெல்லை: தீபாவளி தினத்தன்று, வீடுகளில் இனிப்பு வகைகளுடன் பல்வேறு அசைவ உணவுகள் சமைக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளதால், தமிழகம் முழுவதும் கால்நடை சந்தைகளில் விற்பனை முடங்கியுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் மார்க்கெட்டில் தமிழகம் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் அதிகளவில் குவிந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த மயிலம்பாடி ஆடு, செம்மறி ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
கிடா எடைக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலப்பாளையம் மார்க்கெட்டில் 2 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் கையில் பணத்துடன் குவிந்தனர். ஆடு மட்டுமின்றி சண்டை சேவல், வான்கோழி போன்றவற்றையும் விலை பாராமல் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
இதேபோல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வாரச்சந்தையில் ஆடுகள், ஆந்திரா ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். வாடிப்பட்டி மார்க்கெட்டில் அதிகாலை 4 மணிக்கு துவங்கி 9 மணி வரை 5 மணி நேரத்தில் ரூ.2 கோடி வர்த்தகம் நடந்தது.