சென்னை: ஆவடி யார்டில் இன்ஜினியரிங் பணி நடப்பதால், சென்ட்ரல்-ஆவடி இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செப்டம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – சென்னை சென்ட்ரல் மின்சார ரயில் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு, ஆவடி – சென்னை சென்ட்ரல் பிரிவு ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – சென்னை சென்ட்ரல் இடையே 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – ஆவடி பிரிவில் ரத்து செய்யப்படுகிறது.
இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.