கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் உள்ளூர் மக்கள் கடற்கரைக்கு வருவதால் கூட்டம் அதிகரிக்கும்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், காலையில் சூரிய உதயத்தையும், மாலையில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு மகிழ்வதுடன், நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவியத் தொடங்கினர். காலையில் சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல பூம்பூர் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சில சுற்றுலாப் பயணிகள் மற்ற இடங்களுக்குச் சென்ற பிறகு படகு சவாரி செய்தனர். கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.