பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான நத்திங்கின் துணை பிராண்டான CMF சமீபத்தில் இந்தியாவில் தனது முதல் ஸ்மார்ட் ஃபோனான CMF Phone 1-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் நத்திங்கின் சப்-பிராண்டாக இருக்கும் CMF புதிய மொபைலை தவிர புதிதாக பட்ஸ் ப்ரோ 2 மற்றும் வாட்ச் ப்ரோ 2 ஆகிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் CMF Phone 1 மொபைல் விலை…
நம் நாட்டில் CMF Phone 1 மொபைலானது 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் 2 வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.15,999 மற்றும் ரூ.17,999 ஆகும். இந்த மொபைலுக்கு சலுகைகள் உண்டு என்பதால் மேற்சொன்னதை விட குறைவான விலையில் CMF Phone 1-ஐ வாங்கலாம். CMF Phone 1 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் ஜூலை 12 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் வாட்ச் ப்ரோ 2 தயாரிப்புகளின் விலை விவரங்கள்…
CMF அறிமுகப்படுத்தி இருக்கும் பட்ஸ் ப்ரோ 2-வின் விலை ரூ.4,299 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நிறுவனத்தின் CMF Watch Pro 2-வின் விலை ரூ.4,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாட்ச் ப்ரோ 2-வின் டார்க் கிரே மற்றும் ஆஷ் கிரே மாடல்களுக்கானது நாம் மேலே பார்த்த விலை. வேகன் லெதர் ஃபினிஷில் ப்ளூ மற்றும் ஆரஞ்சு மாடல்களும் இதில் உள்ளன, இவற்றின் விலை ரூ.5,499 ஆகும். CMF
Phone 1 மொபைலின் சிறப்பம்சங்கள்: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் CMF Phone 1-ன் மிகப்பெரிய சிறப்பம்சமாக இன்டர்சேஞ்சபில் கவர்கள் உள்ளன. இதற்காக CMF ஒரு ஸ்க்ரூ-இஷ் (screw-ish) டிசைனை இந்த மொபைலுக்கு கொடுத்துள்ளது. அதாவது, நீங்கள் ஸ்க்ரூடிரைவரை பயன்படுத்தி இந்த மொபைலின் பேக் பேனலை அகற்றி வேறு மாற்றிக் கொள்ளலாம். நீக்கிக் கொள்ளக்கூடிய பேக் கவரானது நீலம், கருப்பு, ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை உள்ளிட்ட பல்வேறு கலர்களில் சுமார் ரூ.1,499 விலையில் கிடைக்கிறது. CMF Phone 1-ஆனது120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 2000nits வரையிலான பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்ட 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இந்த மொபைலில் MediaTek Dimensity 7300 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் 8GB ரேம் மற்றும் கூடுதலாக 8GB விரிச்சுவல் மெமரி உள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Nothing OS 2.6-ல் இயங்குகிறது. மேலும் CMF-ன் இந்த Phone 1-ன் பின்புறம் டூயல் கேமரா யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2MP டெப்த் சென்சார் மற்றும் 50MP பிரைமரி சென்சார் அடக்கம். செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக முன்பக்கம் 16 எம்பி ஷூட்டர் உள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரி உள்ளது. ஆனால் ஸ்மார்ட்போன் பாக்ஸில் சார்ஜர் இருக்காது. எனவே இதை தனியாக பணம் செலுத்தி வாங்க வேண்டும்.