சென்னை: புரட்டாசி அமாவாசை நாளை மறுநாள் பிறக்க உள்ளதால் இன்று அதிகாலையிலேயே மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தி மார்க்கமாக போற்றப்படும் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியமானது. மார்கழியை விட புரட்டாசியை பெருமாள் மாதமாக பக்தர்கள் கடைபிடிக்கின்றனர்.
மேலும் முன்னோர் வழிபாட்டிற்கு மஹாளய அமாவாசையும், அம்பிகை வழிபாட்டிற்கு நவராத்திரியும் மாதமாகும். இதனால் இது வழிபாட்டு மாதமாகவும், உயர்ந்த புண்ணிய மாதமாகவும் கருதப்படுகிறது.
அப்படிப்பட்ட புரட்டாசி மாதம் பிறக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. எனவே, புரட்டாசி மாதத்தையொட்டி, இறைச்சி கடைகளில் இன்று ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
காரணம், புரட்டாசி வந்தால் பலர் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். மீன்பிடி துறைமுகங்களில் இன்று காலை முதலே மக்கள் பல்வேறு வகையான மீன்களை வாங்க போட்டி போட ஆரம்பித்தனர்.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு துறைமுகத்தில் பெரிய மீன்கள் மற்றும் சிறிய மீன்களின் வரத்து காணப்பட்டது. மீன் பிரியர்களும், மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் மீன் வாங்க வந்ததால் காசிமேட்டில் இன்று கூட்டம் அலைமோதியது.