சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 68,704 பேர் அதிகம். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான 2025-ம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்க திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்டத் தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி துணை ஆணையருமான (வருவாய் மற்றும் நிதி) எம்.பிருதிவிராஜ் நேற்று வெளியிட்டார்.
சென்னை மாவட்டத்தில் 3,718 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 284 வாக்குச் சாவடிகளும், எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் குறைந்தபட்சம் 169 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19,41,271 ஆண் வாக்காளர்கள், 20,09,975 பெண் வாக்காளர்கள், 1,252 இதர வாக்காளர்கள் என மொத்தம் 39,52,498 பெயர்கள் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மேலும் 25,628 ஆண்கள், 27,669 பெண்கள் மற்றும் 62 பேர் என மொத்தம் 53,359 வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
12,818 ஆண்கள், 13,178 பெண்கள் மற்றும் 9 பேர் என மொத்தம் 26,005 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, சென்னை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 912 வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகம் தொகுதியில் குறைந்தது 1 லட்சத்து 76 ஆயிரத்து 197 பேர் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல், மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் சென்னை மாநகராட்சியின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் அலுவலகத்தில் நவம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.