புதுடெல்லி: இதுகுறித்து மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எக்ஸ் இணையதளத்தில் கூறியிருப்பதாவது:- கல்வி நிறுவனங்களில் மேற்கூரையாக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை பயன்படுத்துவது குழந்தைகளுக்கு ஆபத்தானது என இத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது. எனவே, 65-க்கும் மேற்பட்ட நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளன.

பள்ளிகளில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை தடை செய்ய மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் என்ற முறையில் நான் உறுதியாக இருக்கிறேன். பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்கும் விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை. அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் புதிய கட்டுமானம் அல்லது சீரமைப்பு பணிகளில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அது கூறியது. இதையடுத்து, ஏற்கனவே பயன்படுத்திய ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் உத்தரவிட்டுள்ளது.