சென்னை ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் நிறுத்தும் இடம் குறைவாகவே இருந்தது. இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல் பயணிகள் சிரமப்பட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, 3 ஏக்கர் பரப்பளவில், புதிய வாகன நிறுத்துமிடத்தை அமைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அடுத்த மாத இறுதியில் திறக்கப்படும் புதிய பார்க்கிங் ஏரியாவில் 100 கார்கள் மற்றும் 1,500 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் கிடைக்கும். இது பயணிகள் அதிக நம்பிக்கையுடன் பயணிக்க உதவும். மேலும், இணைப்பு பேருந்துகள் 5-10 நிமிடங்களில் மெட்ரோ நிலையத்திற்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் புதிய பார்க்கிங் வசதி திறப்பது பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் அதே வேளையில் விமான நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைக்கப்படுவதால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். இணைப்புப் பேருந்துகளை அடிக்கடி இயக்க வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.