தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் இருமொழிக் கொள்கை தான் பிரதானம் என்று திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெற பாஜக திட்டமிட்டது. அதனை இன்று தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2026ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார். அந்த காலத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மக்கள்தொகை அடிப்படையில் எம்.பிக்கள் எண்ணிக்கை என்பது காங்கிரஸின் கொள்கை என்பதை மோடி எதிர்த்துள்ளார். இந்த சூழலில் திமுக அரசு மக்களிடம் பயத்தை ஏற்படுத்தும் விதமாக அனைத்து கட்சி கூட்டம் நடந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற கூட்டம் தேவையற்றது என தெரிவிக்க எடப்பாடி பழனிசாமி பேசியதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறாமல் பார்த்து கொள்வோம் என்று அவரது வாதத்தை முன்வைத்துள்ளார்” என்றும், “எங்களுக்குப் பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தற்போதைய சூழலில் கட்சியில் அடிப்படை வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறோம்” என்று விளக்கினார்.
எதிர்கால தேர்தல் கூட்டணியை பற்றி பேசும் போது, அவர் “தேசிய ஜனநாயக கூட்டணியில் யார், யார் என்பதை நேரத்திலும் காலத்திலும் முடிவு செய்யப்படும். எங்களுக்குப் பிடிக்கக்கூடிய கட்சிகளுடன் கூடி புதிய கூட்டணியை அமைப்போம்” என்றும், “தற்போது எந்தவொரு கட்சியுடனும் ரகசியமாக பேச்சு நடைபெறவில்லை” என்றார்.
அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா என்பது குறித்து, “இதற்கான நேரம் வரும் போது முடிவு செய்யப்படும். தேர்தல் சமயத்தில் தானே கைகோர்க்க வாய்ப்பு இருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.