மதுரை: ‘ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாத சம்பளம் ரூ.6 ஆயிரம் என நிர்ணயம் செய்தது எப்படி?’ என பள்ளிக் கல்வித்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிர்ணயித்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 25) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாத ஊதியம் ரூ.6 ஆயிரம் எப்படி நிர்ணயிக்கப்பட்டது?
தற்போதைய விலைவாசியில் மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டீர்களா? குடும்பம் நடத்த ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா? அத்தகைய அரசாணைகள் எவ்வாறு வெளியிடப்படுகின்றன? இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.