சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவு மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது இந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 595 பூங்காக்கள், 9 கால்பந்து மைதானங்கள், 2 அரங்குகளை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளான சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து இன்று அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.