உடுமலை : கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய பாசன ஆதாரமாக திருமூர்த்தி அணை உள்ளது. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மண் அணையாகும். இதன் மூலம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.
பிஏபி நீர்த்தேக்கங்களில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் மற்றும் அணையில் இருந்து வரும் தண்ணீர் திருமூர்த்தி அணையில் சேமிக்கப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.71 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 856 கன அடியாக உள்ளது. இதனால் அணை விரைவில் நிரம்பி வருகிறது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் எந்த நேரத்திலும் மதகு வழியாக திறந்து விடப்படும் நிலை உள்ளது.
எனவே ஆற்றின் கரையோர கிராமங்களான ஜிலேப்பநாயக்கன்பாளையம், அர்த்தநாரிபாளையம், ராவணபுரம், தேவனூர்புதூர் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.