சென்னை: “நீட் தேர்வுக்கு எதிரான நாடகத்தை திமுக தொடர்ந்து நடத்துவதன் ரகசியம் என்ன?” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அண்ணாமலை, ‘எக்ஸ்’ இணையதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நீட் விலக்கை அரங்கேற்றிய, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அதன் ஒரு பகுதியாக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி,, ஏ.கே.ராஜன் தலைமையில், குழு அமைத்தது. இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள முறைகேடுகளை தமிழக பா.ஜ.க. பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
நீட் தேர்வுக்குப் பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு அமல்படுத்தப்பட்டது. ஆனால், திமுக அரசால் அமைக்கப்பட்ட இந்தக் குழு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விவரங்களை நீட் தேர்வுக்கு முன்பே வழங்க பலமுறை வலியுறுத்தியும் மறுப்பது ஏன்?
முழு விவரம் இல்லாத அறிக்கையுடன் திமுக நீட் எதிர்ப்பு நாடகத்தை தொடர்வதன் மர்மம் என்ன? நீட் தேர்வுக்கு முன் எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர் என்ற உண்மையைச் சொன்னால், நீட் தேர்வுக்குப் பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன் அடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிவந்து திமுக உருவாக்கிய பொய்யான பிம்பம் உடைக்கப்படும் இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.