முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் React JS Developer பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் நேர்காணல் ஜூன் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் React JS, Typescript, JavaScript, HTML, CSS ஆகிய தொழில்நுட்பங்களில் நன்கு தேர்ந்தவராக இருக்க வேண்டும். Bootstrap பயன்படுத்தி responsive pages உருவாக்கும் திறன் அல்லது complex application delivery முறை தெரிய வேண்டும். கூடுதலாக, Redux, Redux Saga, Redux Thunk, useQuery போன்ற State Management வழிமுறைகள் மற்றும் Webpack, Karma, JEST போன்ற மாடூல் பண்ட்லர் பற்றிய அனுபவமும் அவசியம்.
Git, Bitbucket போன்ற code versioning tools-இல் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். Agile மற்றும் Scrum போன்ற மென்பொருள் மேம்பாட்டு முறைமைகள் பற்றியும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் வசதியாக இருக்க வேண்டும்.
இந்த பணி PAN India ஆக உள்ளதால், தேர்வாகும் நபர்கள் இந்தியாவின் எந்த பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படலாம். சம்பள விவரங்கள் இறுதி நேர்காணலின் போது தெரிவிக்கப்படும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பித்த பின், நேர்காணலுக்கான நேரம் மற்றும் இணைப்புகள் மின்னஞ்சல் அல்லது மொபைல் வழியாக தெரிவிக்கப்படும். இது போன்ற வாய்ப்புகள் ஐடி துறையில் புதிய திருப்பங்களை உருவாக்கும். தகுதி உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.