சென்னை: சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தங்கம் விலையில் கடந்த ஆண்டு கடும் வீழ்ச்சி, அக்டோபர் 4-ம் தேதி ஒரு பவுன் ரூ.42,280-க்கு விற்கப்பட்டது. இதன் பின், இஸ்ரேல் – பாலஸ்தீன போரின் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து, டிச., 4-ல், பவுன் ஒன்றுக்கு, 47,800 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
அதன்பிறகு மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் வரலாறு காணாத வகையில் ரூ.50,000ஐ எட்டியது. அதன்பின் ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதற்கிடையில், ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதமாகக் குறைத்தது.
இதனால், காலையில் பவுன் ரூ.54,480 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், மதியம் கடுமையாக சரிந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
இந்நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு சவரன் தங்கம் ஒரு கிராம் ரூ.53,720 ஆகவும், ரூ.6,715 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தூய தங்கம் ஒரு பவுன் ரூ.57,360-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாறாமல் ஒரு கிராம் ரூ.93.50 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.93,500 ஆகவும் உள்ளது.
இதனிடையே கடந்த 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது. இந்த நாட்களில் சந்தை விடுமுறை வந்தாலும் தொடர்ந்து விலையில் சிறிது கூட மாற்றம் இல்லை.
அதன்பின், நேற்று மாறிய தங்கம் விலை இன்றும் மாறாமல் உள்ளது. அதேபோல் வெள்ளி விலையில் 27-ம் தேதி முதல் இன்று வரை மாற்றம் இல்லை. சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், “விலையில் மாற்றம் இல்லாததற்கு காரணம் இல்லை.
பொருளாதாரம், சந்தை போன்றவற்றில் காரணிகளால் ஓரளவு பாதிப்பு ஏற்படும் போது தான் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் இல்லை, சந்தை நிலையானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அதே சமயம், அடுத்த மாதம் முதல் வாரத்தில், பெடரல் வங்கி, வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கும். முடிவைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறலாம். வட்டி விகிதம் குறைவதால் தங்கத்தின் விலை உயரும்.
வட்டி விகிதத்தை உயர்த்தினால், தங்கம் விலை குறையும்,” என்றார்.