இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஒரு வருடம் ஆகிறது. கடந்த ஆண்டு ஹமாஸ் சில இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக பிடித்தது.
அப்போதிருந்து, ஹமாஸ் போர்நிறுத்த விதிமுறைகளின் கீழ் சிலரை விடுவித்த போதிலும், மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் தற்போது போராடி வருகிறது. இப்படி தொடங்கிய இந்த தாக்குதல் தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதலாக மாறியுள்ளது.
இந்த தாக்குதல் நடந்து நேற்றுடன் (அக்-7) ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இஸ்ரேலில் நேற்று சிறப்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலின் எண்ணம் நிறைவேறினால் மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வரும்.
கூட்டத்தில் பேசிய அவர், “ஹமாஸின் தீய ஆட்சியை அகற்றுவது, காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் தாக்குதல்களை முறியடிப்பது, எங்கள் குடிமக்களை திருப்பி அனுப்புவது என நாங்கள் நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் அடைந்தால் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டு வருவோம்” என்றார்.
ஓராண்டுக்கு முன்பு, இந்த நாளில், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிராக, இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக கொலைகாரத் தாக்குதலை நடத்தினர். இந்தப் படுகொலைக்குப் பிறகு, ‘அவர்கள் அறிந்திராத ஒரு சக்தியை எதிர்த்துப் போராடுவோம், நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்றேன்.
நாங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாப்பானதாக ஆக்குகிறோம். நமது தேசத்தின் குழந்தைகள் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்காக, அக்டோபர் 7-ம் தேதி, அன்று நடந்தது மீண்டும் இங்கு நடக்காது என்று உறுதியளிக்கிறேன்.
இஸ்ரேலின் இந்தப் போர் இலக்கை அடைந்த பின்னரே முடிவுக்கு வரும். இஸ்ரேலின் முக்கிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வரும்.
“இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக ஈரானுடன் எதிர் தாக்குதல் நடத்துவது அவசியம்” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.