இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதித் துறை வழக்கு பதிவு செய்தது இந்தியா-அமெரிக்கா உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
2024 நவம்பரில், அதானி குழுமம் இந்திய சோலார் மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அதானி குழுமம் மறுத்தது.
அமெரிக்க நாடாளுமன்ற நீதிக் குழு உறுப்பினரான லான்ஸ் கூடன், இந்த வழக்கு ஆசிய நாடுகளுடனான நட்புறவை பாதிக்கும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவித்தார். வெளிநாட்டு வதந்திகளை துரத்துவதற்குப் பதிலாக உள்நாட்டுக் குற்றச்சாட்டுகளை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாஷிங்டன்: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதித் துறை வழக்கு பதிவு செய்தது இந்தியா-அமெரிக்கா உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.