தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் அருவி, ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்காவிரி ஆற்றில் கடந்த 14ம் தேதி காலை வினாடிக்கு 4,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து அன்றிரவு 14,000 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, பரிசல் ஆற்றில் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் வினாடிக்கு 19,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, மதியம் 20,000 கன அடியாகவும், மாலையில் 21,000 கன அடியாகவும் அதிகரித்தது. அருவியில் குளிக்க தடை: இதனால், முக்கிய அருவி, சினிஅருவி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.ஆற்றிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு செல்லவும், காவிரி ஆற்றில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, தர்மபுரிமா மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியைத் தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளது.எனவே, ஆலம்பாடி முதல் ஒகேனக்கல் வரை உள்ள நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மேலும் ஆற்றங்கரையில் இறங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது,” என்றார்.
மேட்டூரில் 16,557 கனஅடி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,577 கனஅடியாக அதிகரித்து, நேற்று முன்தினம் 4,047 கனஅடியாகவும், நேற்று காலை 8 மணிக்கு 5,054 கனஅடியாகவும் இருந்தது. காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணை நீர்மட்டம் 43.22 அடியில் இருந்து 44.62 அடியாகவும், நீர் இருப்பு 13.08 டிஎம்சியில் இருந்து 14.59 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.