
கோடைக்கால சுற்றுலா பருவம் தொடங்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் மூலம் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கதொரு சலுகையை அகாசா ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. MakeMyTrip இணையதளத்தில் வெளியான தகவலின்படி, பெங்களூருவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் பயணிகள் தற்போது மிகக்குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டை பெற முடியும்.

அகாசா ஏர் ஜூலை 5ஆம் தேதி காலை 5.05 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்படும். இந்த விமானம் காலை 7.45 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்குகிறது. அதாவது, மொத்த பயண நேரம் வெறும் 2 மணி நேரம் 40 நிமிடங்கள். இந்த பயணத்திற்கான சிக்கன வகுப்பு டிக்கெட் விலை ரூ.5202 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே பயணத்தை ரயிலில் மேற்கொண்டால், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிக்கான கட்டணம் துரந்தோ எக்ஸ்பிரஸில் ரூ.5675 மற்றும் ராஜதானி எக்ஸ்பிரஸில் ரூ.5840 ஆகும். முதலாம் வகுப்பு ஏசி கட்டணம் துரந்தோவில் ரூ.7090 மற்றும் ராஜதானியில் ரூ.7300 ஆகிறது. அதேபோல், கர்நாடகா எக்ஸ்பிரஸ் முதலாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.5520 மற்றும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸில் ரூ.5990 எனத் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறு பார்க்கும்போது, விமான பயணம் என்பது ரயில்போக்குவரைவிட சிறந்த நேர மற்றும் பண சேமிப்பு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், ரயிலில் பெங்களூரு முதல் டெல்லி வரை 32 மணி நேரம் முதல் 45 மணி நேரம் வரை ஆகும். ஆனால் விமானம் மூலமாக இந்த பயணத்தை மூன்றுக்கு குறைவான நேரத்தில் முடிக்க முடிகிறது.
கோஇபிபோ இணையதளத்தின்படி, அகாசா ஏர் மூலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான விமான டிக்கெட் விலை ரூ.5501. அந்த விமானம் காலை 5.05 மணிக்கு புறப்பட்டு, காலை 8 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை அடைகிறது.
இந்த தகவல்களைக் கொண்டு பார்க்கும் போது, விமான பயணம் இப்போது ரயிலைவிட மலிவாகவும், நேரம் மிச்சப்படுத்தக்கூடியதாகவும் மாறியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்ப ஊழியர்கள், வணிக பயணிகள் மற்றும் சுற்றுலா செல்வோர் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.