நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்த பல மருந்துகள் இருந்தாலும், வீட்டு வைத்தியத்தில் ஏலக்காய்க்கு தனி இடம் உண்டு. நம் வீட்டில் இனிப்புகளுக்கு சுவையூட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படும் ஏலக்காய் மருத்துவக் குணம் கொண்டது. சத்துக்கள் நிறைந்த ஏலக்காய் பித்தம், தலைவலி, சளி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். இது பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருந்து.
ஏலக்காய்:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களுக்கு நம் வீட்டில் அலமாரியில் தனி இடம் உண்டு. இனிப்புகள் தயாரிக்கப் பயன்படும் ஏலக்காயில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஏலக்காய் அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காய் சத்துக்கள்:
ஏலக்காய் விதைகளில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. ஏலக்காயில் போர்னியோல், கற்பூரம், பைனீன், ஹீமுலீன், கெரியோஃபிலீன், கார்வோன், பூக்கலிப்டோல், டெர்பின், போன்ற ஆவியாகும் எண்ணெய்கள் இருப்பதால் அரிய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும். இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
ஏலக்காய் தேநீர்:
இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் பிற நச்சுகளை நீக்குகிறது. இளம் தாய்மார்கள் பிரசவத்திற்குப் பிறகு ஏலக்காயைப் பயன்படுத்தலாம். ஏலக்காய் டீ குடிப்பதால் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். இது மன அழுத்தத்திற்கு நல்லது என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஒரு கப் ஏலக்காய் டீ சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்த:
ஏலக்காய்த்தூள், டீத்தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அதில் தேன் சேர்த்து தினமும் இரண்டு வேளை குடித்து வர நரம்புகள் வலுவடையும். ஏலக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலுவடையும். ஏலப்பொடி, சீரகப் பொடி, மல்லிப்பொடியுடன் சிறிது கருப்பட்டி கலந்து ஒரு நெல்லிக்காய் அளவு காலை மாலை சாப்பிட்டு வர பித்தம் குணமாகும். ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா ஆகியவற்றைக் கஷாயம் செய்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
அஜீரணம் குணமாகும்:
வெற்றிலையுடன் சிறிது வெற்றிலைப் பொடியை மென்று சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். நல்ல பசிக்கு உணவின் சுவை தெரியும். ஏலப்பொடியுடன் சிறிது மிளகுத் தூளும், சிறிது துளசிச் சாறும் சேர்த்துச் சாப்பிட்டால், கடும் சளி வெளியேறி, குணமாகும். இது பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருந்து.
உணவு செரிமானம்:
நான்கு மிளகுத்தூள், சிறிதளவு ஏலக்காய், சுக்கு ஆகியவற்றுடன் பாலைத் தூவி, விழுதாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இது அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லைக்கு சிறந்த மருந்தாகும். உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
ஏலக்காயை வாயில் வைத்து உமிழ்நீரை விழுங்கினால் வாய் துர்நாற்றம் மாறும். வாய் புண் இருந்தாலும் குணமாகும். அன்னாசிப்பழச் சாற்றில் ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும். நீர் தேக்கம் நீங்கும்.
ஆன்மீக பரிகாரம்:
இது நடுக்கத்தை போக்கக்கூடியது. தசைப்பிடிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. விக்கல்களில் இருந்து நம்மைக் காப்பாற்ற உதவுகிறது. படிப்பில் தாமதம் உள்ளவர்கள், உடல் நடுக்கம் உள்ளவர்கள் ஏலக்காயை மாலையாகப் போட்டு பெருமாளுக்கு அணிவிப்பர். ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவிப்பதால் வாசிப்புத் திறனும், அறிவுத்திறனும் அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.