சென்னை: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். இதில் த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த சூழலில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களை அடுத்து, தனது ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழ்நிலை மற்றும் அதிகரித்த பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, மே 16 அன்று நடைபெறவிருந்த ‘தக்லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமது வீரர்கள் எல்லையில் தங்கள் கடமையை துணிச்சலுடன் செய்து வரும் நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, மாறாக அமைதியான ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான நேரம் என்று நாங்கள் நம்புகிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த நேரத்தில், நமது நாட்டின் பாதுகாப்பிற்காகக் காத்திருக்கும் வீரர்கள் மற்றும் மாவீரர்களைப் பற்றி நாங்கள் நினைக்கிறோம். ஒரு நாட்டின் குடிமக்களாக, பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் பதிலளிப்பது நமது கடமை.”