நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் 14 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், இருவரும் பிரிந்துள்ளனர். விவாகரத்து வழக்கில் இருக்கும் இவர், சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார்.அவருடன், தெரபிஸ்ட்டாக இருந்த கெனிஷா பிரான்சிஸும் வந்திருந்தார்.

இருவரும் கைபிடித்து வந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், இது காதல் உறவை வெளிப்படுத்தும் அறிகுறி என பேசுகிறார்கள். மேலும், திருமண வரவேற்பிலும் ரவி கெனிஷாவுடன் வந்ததை பலரும் கவனித்தனர்.இதனால் கெனிஷா யார் என்று இணையத்தில் தேடி வருகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த கெனிஷா ஒரு பாடகியும், நடன கலைஞரும், தெரபிஸ்டுமாவார். கெனிஷாவை பற்றிய விவரங்களை ரசிகர்கள் மீண்டும் ஆராய ஆரம்பித்துள்ளனர்.
கெனிஷாவுடன் கோவாவில் வெல்னஸ் சென்டர் ஒன்றைத் தொடங்க விருப்பம் கொண்டிருப்பதாக முன்பு கூறியிருந்தார் ரவி. இதனால், இருவருக்கிடையே தனிப்பட்ட உறவு இருக்கலாம் என்ற கோணத்தில் ரசிகர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
சமூக வலைதளங்களில், “ஆர்த்தியை விட்டுப் பிரிந்து புதிய உறவை தொடங்குவது நியாயமா?” என வினவுகிறார்கள். மன அழுத்தத்தில் இருக்கும் ஆர்த்திக்கு யார் தெரபி கொடுப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இவ்வாறாக கெனிஷா பற்றி மீண்டும் விவாதங்கள் எழ, ரவியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆர்வம் நிலவுகிறது. ஆர்த்தியிடம் இருந்து ரவி தற்போது பூரணமாக பிரிந்துவிட்டாரா, இல்லையா என்பது குறித்து சிக்கல்கள் தொடருகின்றன.