சென்னை: ஆர்.ஜே. பாலாஜியின் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. படத்தின் டைட்டில் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு சூர்யா 45 வெளியானால், கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தின் வெளியீடும் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் மாளவிகா மோகனன் நடித்த ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் முதல் பாகம் 2022 தீபாவளி பண்டிகையின் போது வெளியிடப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் சூர்யாவின் படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் ‘சர்தார் 2’ படத்தை தள்ளிப்போட கார்த்தி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.