தேவையான பொருட்கள் :
வாழைப்பூ – 1 கப்
மஞ்சள் பொடி – 1/4 tsp
எண்ணெய் – 2 tsp
கடுகு – 1/2 tsp
உளுத்தம் பருப்பு – 1 1/2 tsp
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
புளி – சிறிதளவு
தேங்காய் – 3 tsp
உப்பு – தே.அ
செய்முறை :
வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பின் அதை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி உளுந்தை வதக்குங்கள். பொன்னிறமாக வந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பெருங்காயத் தூள் சேர்த்த பின்னர் வாழைப்பூவை சேர்த்து வதக்கவும். இறுதியாக தேங்காய் மற்றும் புளி போட்டு வதக்கி அடுப்பை அணைத்துவிடவும்.
தற்போது இந்தக் கலவையை ஆற வைக்க வேண்டும். சூடு தணிந்ததும் மிக்ஸி ஜாரில் போட்டு , உப்பு சேர்த்து மசிய அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது வாழைப்பூ துவையல் சாப்பிட தயார்.