மதுரை அருகே ஒத்தக்கடை நரசிங்கம் சாலையில், கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், கிழக்கு மாவட்ட தலைவரும், வக்கீலுமான ராஜாசிம்மன் தலைமையில், தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், மதுரை எம்.பி கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி வெங்கடேசனின் அவதூறான பேச்சை கண்டித்தும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், கொள்ளை சம்பவங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். கொலைகள், கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து மரணம். இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.