பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கியது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் வெளிநாடுகளிடம் தனது நிலைப்பாட்டை விளக்கும் நோக்கில் ஏழு தூதுக் குழுக்களை அனுப்பியது. அதில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா சென்றிருந்தது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது ஜெர்மனியில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோகன் வடேபாலை சந்தித்து பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை விரிவாக விளக்கியார். இந்த சந்திப்பின் பின்னர், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோகன் வடேபால் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அவரது அறிக்கையில், ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பகல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம் எனக் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தன்னை தற்காத்துக்கொள்ள உரிமையுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நீடித்த சமாதானத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவும் ஜெர்மனியும் பயங்கரவாதத்தை வேரறுக்கும் பணியில் இணைந்து செயல்படுவதைத் தொடரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா எந்த நாட்டுக்கும் அணு ஆயுத மிரட்டல் விடுத்ததே இல்லை என்று கூறினார். ஆனால் பாகிஸ்தான் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பதில் அளிக்கப்பட்டது எனவும், இந்தியாவின் நிலைப்பாட்டில் குழப்பமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜெர்மனிக்கு நன்றி தெரிவித்த ஜெய்சங்கர், ஒவ்வொரு தேசமும் பயங்கரவாதத்துக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்வது கடமை எனவும் அவர் கூறினார். இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை, பாகிஸ்தான் தொடங்கிய தாக்குதலுக்கு நேரடி பதிலாகும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், இந்தியா தன் சுயநினைவையும் பாதுகாப்பையும் சமரசமின்றி காப்பாற்றும் உறுதியின் சான்றுகளாகக் காணப்படுகின்றன. ஜெர்மனி உள்ளிட்ட சர்வதேச ஆதரவைப் பெறுவது, இந்தியாவின் குருதியை சர்வதேச மேடையில் வெளிப்படுத்தும் முக்கிய நகர்வாக அமைந்துள்ளது.