பெங்களூரு: கன்னட சூப்பர் ஸ்டார் யஷ்ஷின் அம்மா புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். பி.ஏ. புரொடக்ஷன்ஸின் கீழ் அவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு ‘கொத்தாலவாடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் நோக்கில் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிருத்வி அம்பர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காவ்யா ஷைவா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீராஜ் எழுதி இயக்குகிறார். இந்த சூழ்நிலையில், ‘கொத்தாலவாடி’ படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அபிநந்தன் காஷ்யப் பின்னணி இசை, விகாஷ் வசிஷ்டா, இசை. 90 வினாடிகள் கொண்ட இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் தலைப்பு, ‘கொத்தாலவாடி’, கர்நாடகாவின் குண்ட்லுபேட்டை தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்தக் கிராமத்தில் படமாக்கப்பட்டுள்ளன.