சென்னை: உன்னி முகுந்தன் நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மார்கோ’ படத்திற்குப் பிறகு, ‘கட்டாளன்’ என்பது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் பதாகையின் கீழ் ஷெரிப் முகமது தயாரித்த ஒரு பிரமாண்டமான பான்-இந்தியா படமாகும்.

இதில் ஆண்டனி வர்கீஸ் (பெப்பே) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பால் ஜார்ஜ் இயக்குகிறார். ‘காந்தாரா’ இசையமைப்பாளர் அஜனீஷ் பி. லோக்நாத் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதையைக் கொண்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.