சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பரிவ் சண்டை காட்சிகளை இயக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்தப் படம் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருகிறது. சத்யராஜ், பஹத் பாசில், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், சில பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் இப்படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவராக பஹத் பாசில் இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் தற்போது வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு வேடத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கிறார். படத்தில் அவருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே உணர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.