அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் தங்கள் நண்பரின் ரியல் எஸ்டேட்டில் தலா ரூ.10 கோடி முதலீடு செய்துள்ளனர். சினிமாவில் பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட்டில் நிறைய முதலீடு செய்து வருபவர் அமிதாப் பச்சன். மும்பையில் அவருக்கு பல அலுவலகங்கள் மற்றும் பிளாட்கள் உள்ளன. அவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் அவர் சம்பாதிக்கிறார், மேலும் அவரது மகன் அபிஷேக் பச்சனையும் கூட்டாண்மையில் சேர்த்துள்ளார்.

தற்போது, அமிதாப் பச்சன் தனது நண்பரும் இந்தி திரைப்பட தயாரிப்பாளருமான ஆனந்த் பண்டிட்டின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். கடந்த டிசம்பரில், ஆனந்த் பச்சன் தனது கட்டுமான நிறுவனத்திற்காக பங்குச் சந்தை மூலம் ரூ.400 கோடி திரட்டினார். இதில், அமிதாப் பச்சன் ரூ.10 கோடி முதலீடு செய்துள்ளார். ஷாருக்கான் தனது குடும்ப அறக்கட்டளை மூலம் ரூ.10.1 கோடிக்கு நிறுவனத்தில் 6.75 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார்.
ரித்திக் ரோஷன், ஏக்தா கபூர், சாரா அலி கான், டைகர் ஷெராஃப் மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். “நான் அமிதாப் பச்சனின் படங்களைப் பார்த்து வளர்ந்தேன். அவரது ‘திரிசூல்’ படம் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தது. அது அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு வர என்னைத் தூண்டியது. அந்த விஜய் கதாபாத்திரத்தால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அமிதாப் பச்சனின் வீட்டிற்கு அருகில் ரூ.50 கோடிக்கு ஒரு வீட்டை வாங்கினேன். அமிதாப் பச்சன் தனது வீட்டை விரிவுபடுத்த விரும்பியபோது, என் வீட்டை அவருக்கு விற்றேன்,” என்று அவர் கூறினார்.